About us
To experience life and to win at life. Let your humanity be a guiding light in their time of darkness . This is you time to help.
வாழ்வினை கட்டியெழுப்பல், தமது கடமைகளை நிறைவேற்றுதல், தான் வாழும் சமூகத்திற்கு சுமையாக வாழாதிருத்தல் எனும் அனைத்து முக்கிய காரணிகளுக்கும் அடிப்படையாக அமைவது கல்வியே ஆகும். பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு முறையான கல்வியை அளித்து அவர்களை ஒரு உன்னத நிலைக்கு கொணர்வித்தல் எனும் விடயத்தினை செய்வதற்கு செய்யும் சேவை அளப்பரியதாகும்.
ஆனால் பல்வேறு பொருளாதார இன்னல்களின் மத்தியில் வாழும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு முறையான கல்வியை வழங்குவது கடினமான முயற்சியாகவே இருக்கிறது. அதனாலேயே இவ்வாறான பொருளாதார இன்னல்களை எதிர்நோக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு அவர்களின் கல்விக்கு உதவிக்கரமாக அமையும் பொருட்டு துவங்கப்பட்டதே இந்த புலமைப்பரிசில் செயற்றிட்டமாகும். அவர்களுக்கு நீங்களும் வளர்ப்பு தந்தையாகலாம்… வளர்ப்பு தாயாகலாம்… தமது எதிர்காலத்தினை வெற்றி கொள்ள எத்தணிக்கும் அந்த பிள்ளைகளுக்கு உங்களது உதவிக்கரத்தினை அளிக்க நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
குறைந்த வருமானமுடைய குடும்பங்களில் வாழும், கற்றல் செயற்பாடுகளில் திறமை கொண்ட மாணவ மாணவியர் பொருளாதார பிரச்சினைகளினால் தமது கல்வியினை தொடர முடியாத துர்ப்பாக்கியத்திற்கு ஆளாகின்றனர். அதேபோன்று இவ்வாறான குடும்பங்களில் வாழும் மாணவர்களுக்கு உதவி செய்யும் அரசுசார் மற்றும் அரசு சாராத அமைப்புகள் மிக மிக குறைவான எண்ணிக்கையே என்று கூறலாம். நற்பண்புகளும் அறிவும் நிறைந்த சந்ததியை உருவாக்குவதற்கான குறைந்த வருமானமுடைய, திறமையான மாணவர்களுக்கு உபகாரம் செய்வதானது காலத்தின் தேவையாக உள்ளது.
அதேபோன்று தற்போதைய கற்கைமுறைகளினால் பலதரப்பட்ட கல்வி மேதைகள் உருவாகினாலும் நற்பண்புகள் கொண்ட, மனிதாபிமானமுடைய மேதைகளின் தோற்றம் மிகவும் அரிதே. ஆகையால் பொருளாதார பிரச்சினைகளால் அல்லலுறும் மாணவ மாணவியர்க்கு உதவிக்கரம் நீட்டும் பொருட்டும் நற்பண்புகளினால் வளம்பெற்ற எதிர்கால சந்ததியினரை தேசத்திற்கு அளிப்பதற்குமான ஷஷ்ரத்தா| தொலைக்காட்சி, வானொலி என்பவற்றின் தோற்றுவிப்பாளாரான பூஜைக்குரிய கிரிபத்கொடை ஞானானந்த தேரர் அவர்களின் ஆசிர்வாதத்தினால் இந்த புண்ணியமிகுந்த செயற்றிட்டம் செயற்படுத்தப்படுகின்றது.
க.பொ.த சாதாரண பரீட்சை வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 வரையிலான புலமைபரிசில் தொகையும் உயர்தரம் அல்லது பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3000 வரையிலும் வழங்கப்படும்.
இப்புலமைபரிசிலுக்கு கீழ்காணும் முறைகளில் ஒரு முறை மூலம் உதவலாம்.
(அ) மாதாந்தம். ரூ. 3000 அல்லது ரூ.2000 வழங்குவதன் மூலம் ஒரு மாணவர்கான மாதாந்த புலமைபரிசில் தொகையை வழங்குதல். இங்கு குறிப்பிட்ட மாணவருக்கான ஒரு வருட புலமைபரிசில் பணத்தொகையை ஒரே தடவையாக / தவணை முறை / மாதாந்தம் ஷ்ரத்தா புலமைபரிசில் நிதியத்திற்கு வழங்கலாம். அதனை வருடந்தோறும் அணுசரணை பெற்றோர்களால் கொண்டு நடத்த முடியும். புலமைப்பரிசிலுக்கான நிதியுதவி வழங்க முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படின்அ தனை அறிவித்து இதிலிருந்து நீங்கி கொள்ளவும் முடியும்.
(ஆ) தான் விரும்பும் அளவிலான பணத்தினை ‘ஷ்ரத்தா’ புலமைபரிசில் நிதியக்கணக்கில் வைப்பு செய்வதன் மூலம் ‘ஷ்ரத்தா’ புலமைபரிசில் செயற்றிட்டத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதற்கு உதவி செய்தல்.
අ) ගමන් වියදම් හා පාසැල් උපකරන ආදිය ලබා ගැනීම පිණිසත් එදිනෙදා වියදම් පිණිසත් රු.2420ක මුදලක් වෙන් වේ.
(ආ) එම ශිෂ්යත්වලාභී දරුවාට තමන් කැමති පිනක් සිදු කරනු පිණිස රු.150ක මුදලක් වෙන් වේ.
(ඇ) තමන්ගේ පවුලේ දෙමාපියන් සහෝදර සහෝදරියන් උදෙසා වැය කරනු පිණිස රු.150ක මුදලක් වෙන් වේ.
(ඈ) ශිෂ්යත්ව ව්යාපෘතියේ ලිපි ගනුදෙනු කටයුතු උදෙසා වැය කරනු පිණිස රු.130ක මුදලක් වෙන් වේ.
(ඉ) එම දරුවාට දහම් පොතක් ලබා දෙනු පිණිස රු.150ක මුදලක් වෙන් වේ
(අ) ගමන් වියදම් හා පාසැල් උපකරන ආදිය ලබා ගැනීම පිණිසත් එදිනෙදා වියදම් පිණිසත් රු.1510ක මුදලක් වෙන් වේ.
(ආ) එම ශිෂ්යත්වලාභී දරුවාට තමන් කැමති පිනක් සිදු කරනු පිණිස රු.120ක මුදලක් වෙන් වේ.
(ඇ) තමන්ගේ පවුලේ දෙමාපියන් සහෝදර සහෝදරියන් උදෙසා වැය කරනු පිණිස රු.120ක මුදලක් වෙන් වේ.
(ඈ) ශිෂ්යත්ව ව්යාපෘතියේ ලිපි ගනුදෙනු කටයුතු උදෙසා වැය කරනු පිණිස රු.130ක මුදලක් වෙන් වේ.
(ඉ) එම දරුවාට දහම් පොතක් ලබා දෙනු පිණිස රු.120ක මුදලක් වෙන් වේ.
To experience life and to win at life. Let your humanity be a guiding light in their time of darkness . This is you time to help.