98 වන ජල පිරිපහදු මධ්යස්ථානය
98 වන ජල පිරිපහදු මධ්යස්ථානය බැරලෝහ මිශ්ර අපිරිසිදු ජල පරිභෝජනය හේතුවෙන් අප මාතෘභූමියේ ප්රදේශ ගණනාවක පැතිර යන වකුගඩු අක්රිය වීමේ මාරාන්තික රෝගයෙන් පීඩාවට පත් අපේම
கொடிய சிறுநீரக நோயிக்குட்படும் நிலையில் வாழும் எம்முடைய சகோதர மக்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்கும் புண்ணிய செயற்றிட்டம். இரசாயன பதார்த்தங்கள்கலந்த நீரை சுத்திகரிப்பு செய்து மக்களுக்கு வழங்குதலும் குடிநீர் பற்றாக்குறையால் அல்லலுறும் மக்களுக்கு குடிநீர் வசதிகளை அமைத்துக் கொடுத்தலும் இந்த செயற்றிட்டத்தின் முக்கிய பணியாகும்.
காலங்காலமாக விவசாயத்திற்காக உபயோகிக்கும் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிநாசிகள் என்பவை காரணமாக அங்குள்ள நீர் நிலைகளின் நீரில் விசாயத்தினக் போது உபயோகிக்கும் ஆசனிக், கெட்மியம், பாதரசம் என்பவை கலந்துள்ளமை பல்வேறு பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
150000 எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளர்கள் வடமத்திய மாகாணத்தில் வசிக்கின்றனர். 20000ம் சிறுநீரக நோயாளர்கள் வருடாந்தம் மரணிக்கின்றனர். இவ்வாறாக அப்பாவி உயிர்கள் மென்மேலும் மரணிப்பதற்கு நீங்கள் இடமளிக்கிறீர்களா?
நீங்கள் ஏன் உதவ வேண்டும்?
எமது நாட்டிலேயே ஒரு பகுதியில் குடிப்பதற்கு சுத்தமான நீரின்றி வாழும் அப்பாவி மக்களுக்கு உதவும் பொருட்டு எம்மால் ஷ்ரத்தா (பிவிதுரு பென் பூஜா) சுத்தமான நீர் அனைவருக்கும் எனும் புண்ணிய செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த செயற்றிட்டத்தின் மூலம் அசுத்தமான நீரினை உபயோகப்படுத்தும் பிரதேசங்களை இனங்கண்டு அந்த பிரதேசங்களில் நீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆசனிக் கெட்மியம் மற்றும் பாதரசம் போன்ற இரசாயனங்கள் அதிகளவில் இந்நீரில் கலந்துள்ளமையால் அவற்றை நீரிலிருந்து பிரித்தெடுப்பதற்காகக ரிவர்ஸ் ஒஸ்மொஸிஸ் எனும் தொழிநுட்பம் உபயோகிக்க வேண்டியுள்ளது.
காலங்காலமாக விவசாயத்திற்காக உபயோகிக்கும் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிநாசினிகள் என்பவை காரணமாக அங்குள்ள நீர் நிலைகளின் நீரில் விசாயத்தின் போது உபயோகிக்கும் ஆசனிக், கெட்மியம், பாதரசம் என்பவை கலந்துள்ளமை பல்வேறு பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
150,000 எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளர்கள் வடமத்திய மாகாணத்தில் வசிக்கின்றனர். இவர்களுள் வருடாந்தம் 20,000ம் சிறுநீரக நோயாளர்கள் மரணிக்கின்றனர். இவ்வாறாக அப்பாவி உயிர்கள் மென்மேலும் மரணிப்பதற்கு நீங்கள் இடமளிக்கிறீர்களா?
01.ஷ;ரத்தா பரிசுத்தமான குடிநீர் அனைவருக்கும் பண உதவியளித்தல் -இந்த மாபெரும் புண்ணிய செயற்றிட்;டத்தினை செவ்வனே செய்துகொள்வதற்கு தாங்கள் பண உதவி செய்ய இயலும். கீழ்வரும் வங்கிக் கணக்கிற்கு நீங்கள் விரும்பிய தொகையை அளிப்பதன் மூலம் இந்த புண்ணிய செயற்றிட்டத்திற்கு உதவ தாங்களால் முடியும்.
பணம் வைப்பு செய்த பின்னர் அந்த ரசீது பத்திரத்தை ‘பரிசுத்தமான குடிநீர் அனைவருக்கும்’ என கடிதவுரையின் வலது புறம் எழுதி இல. 369 ஹேவாகமை, கடுவலை எனும் முகவரிக்கு அனுப்புங்கள். அல்லது, ………. எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
02. செயற்றிட்டத்தினை முழுமையாக நிறைவேற்றுவதற்காக நிறுவனங்களை தொடர்புபடுத்தல்.-
தங்கள் நிறுவனம் அல்லது தாங்கள் தொழில்புரியும் நிறுவனத்தினை இந்த புண்ணிய செயற்றிட்டத்திற்கு ஈடுபடுத்த உங்களால் முடியும். அதன் மூலம் ஒரு கிராமத்திற்கோ, அல்லது பல கிராமங்களுக்கோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவ முடியும். இதற்கான அனுசரணையை அந் நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டியதுடன் ஷ;ரத்தா தொலைக்காட்சியின் மேற்பார்வையுடனும் ஒருங்கமைப்பிலும் இடம்பெறும்.
03. இச் செயற்றிட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் என்பன அளித்தல்.-
உங்களால் இயன்றளவு இந்த புண்ணிய செயலுக்கு அவசியமான நீர் தாங்கிகள், சுத்திகரிப்பு நிலையங்களாக செயற்படும் சிறு இல்லங்கள் என்பன அமைப்பதற்கு உதவுவதல் போன்ற வழிமுறைகளில் உதவ முடியும்.
04. திறமை மற்றும் சிரமதானங்களால் உதவ முடியும்.
சிரமதானங்களின் மூலமான அல்லது தங்களின் திறமைகளால் உங்களால் எமக்கு உதவ முடியும். அது தொடர்பாக அவ்வவ்போது இணையத்தளம் மூலம் அறியத்தருகின்றோம்.
இந்த செயற்றிட்டம் தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள வேண்டுமாயின் 071-4366577 எனும் எண்னை தொடர்பு கொள்ளுங்கள்.
Bank:: Sampath Bank – Kaduwela
Ac Number:: 1162 1399 8878
Ac Name:: Shraddha Media Network
For more information 070 64 32 836
98 වන ජල පිරිපහදු මධ්යස්ථානය බැරලෝහ මිශ්ර අපිරිසිදු ජල පරිභෝජනය හේතුවෙන් අප මාතෘභූමියේ ප්රදේශ ගණනාවක පැතිර යන වකුගඩු අක්රිය වීමේ මාරාන්තික රෝගයෙන් පීඩාවට පත් අපේම
97 වන ජල පිරිපහදු මධ්යස්ථානය බැරලෝහ මිශ්ර අපිරිසිදු ජල පරිභෝජනය හේතුවෙන් අප මාතෘභූමියේ ප්රදේශ ගණනාවක පැතිර යන වකුගඩු අක්රිය වීමේ මාරාන්තික රෝගයෙන් පීඩාවට පත් අපේම
96 වන ජල පිරිපහදු මධ්යස්ථානය බැරලෝහ මිශ්ර අපිරිසිදු ජල පරිභෝජනය හේතුවෙන් අප මාතෘභූමියේ ප්රදේශ ගණනාවක පැතිර යන වකුගඩු අක්රිය වීමේ මාරාන්තික රෝගයෙන් පීඩාවට පත් අපේම
இரசாயன பயன்பாட்டினால் அசுத்தமடைந்த நீரை அதிகளவாக பயன்படுத்தும் வடமத்திய மாகாணம் பூராகவும் பரவிச்செல்லும் ஒருவகை நோயே இந்த நீண்ட கால சிறுநீரக நோயாகும். இது இலங்கையின் கடந்த 08 முதல் 10 வருடங்களுள் தோன்றிய பெரும் சுகாதார பிரச்சினையாகும். இந்த நோய்க்கு காரணம் என்ன என்பதனை சரியான முறையில் இனங்கண்டு கொள்ளாததால் ‘இனங்கண்டுகொள்ளாத சிறுநீரக நோய்’ என்று குறிப்பிடப்பட்டது.
இந்த சிறுநீரக நோய் ஏனைய சிறுநீரக நோய்களிலும் பார்க்க வித்தியாசமானதாகும். நீண்ட காலமாக எவ்வித நோய் அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் நோயாளியினுள் மறைந்திருந்து சிறிது சிறிதாக மேலோங்கி நோயாளியை மரணம் வரை இழுத்துச் செல்லக்கூடியதாகும். இந்த நோய் இளைஞர்களைப் போன்றே விவசாயத்தில் ஈடுபடும் 40 – 60 வயது வரையிலானோர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த நோய் தொடர்பாக 1992ம் வருடம் முதன்முதலாக அறிந்துகொள்ளும்போது அந்நோயினால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
நீண்ட கால சிறுநீரக நோய்கள்.
இரசாயன பயன்பாட்டினால் அசுத்தமடைந்த நீரை அதிகளவாக பயன்படுத்தும் வடமத்திய மாகாணம் பூராகவும் பரவிச்செல்லும் ஒருவகை நோயே இந்த நீண்ட கால சிறுநீரக நோயாகும். இது இலங்கையின் கடந்த 08 முதல் 10 வருடங்களுள் தோன்றிய பெரும் சுகாதார பிரச்சினையாகும். இந்த நோய்க்கு காரணம் என்ன என்பதனை சரியான முறையில் இனங்கண்டு கொள்ளாததால் ‘இனங்கண்டுகொள்ளாத சிறுநீரக நோய்’ என்று குறிப்பிடப்பட்டது.
இந்த சிறுநீரக நோய் ஏனைய சிறுநீரக நோய்களிலும் பார்க்க வித்தியாசமானதாகும். நீண்ட காலமாக எவ்வித நோய் அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் நோயாளியினுள் மறைந்திருந்து சிறிது சிறிதாக மேலோங்கி நோயாளியை மரணம் வரை இழுத்துச் செல்லக்கூடியதாகும். இந்த நோய் இளைஞர்களைப் போன்றே விவசாயத்தில் ஈடுபடும் 40 – 60 வயது வரையிலானோர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த நோய் தொடர்பாக 1992ம் வருடம் முதன்முதலாக அறிந்துகொள்ளும்போது அந்நோயினால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
வடக்கே வவுனியா மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும், தெற்கே குருணாகல் மாவட்டம் மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கும், கிழக்கே பொனறுவை மற்றுமு; திருகோணமலை மாவட்டங்களையும் மேற்கே புத்தளம், மன்னார் மாவட்டங்களையும் எல்லையாக கொண்டதே அனுராதபுர மாவட்டமாகும். இலங்கையின் பெரிய நிர்வாக மாவட்டமும் அனுராதபுரமாகும். அது நாட்டின் 10 சதவீத நிலப்பரப்பாகும். 7179 சதுர கி.மீ கொண்டது. அனுராதபுத்தின் சனத்தொகை அன்னளவாக 860000 பேராவர். 649 கிராமசேவக பிரிவுகளைகொண்ட அனுராதபுர மாவட்டம் விவசாயத்தினை சார்ந்திருக்கும் ஒரு பிரதேசமாகும்.
அறிக்கைகளின்படி அதிகளவிலான சிறுநீரக நோயாளர்கள் அனுராதபுர மாட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். வருடதோறும் புதிதாக 1350 சிறுநீரக நோயாளிகள் இனங்காணப்படுகின்றனர். இந்த மாவடடத்தில் 20 சதவீதமான மக்கள் சிறுநீரக நோயாளர்களாக இனங்காணபட்டுள்ளனர். திரு.இரணசிங்க வைத்தியரின் தரவுகளின்படி மதவாச்சி பிரதேசத்தில் மாத்திரம் 2823 சிறுநீர நோயாளர்களும், பதவிய பிரதேசத்தில் 2464 நோயாளர்களும், கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் 933 நோயாளர்களும் இன்றளவில் இனங்காணப்பட்டுள்ளனர். இது எவ்வளவு பாரதூரமான விடயம் என்றால் வருடந்தோறும் அனுராதபுரத்தில் மாத்திரம் 2000 பேர் சிறுநீரக நோயினால் மரணத்தை தழுவ நேரிடுகின்றது. வைத்திசாலைகளில் மரணிக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை மாத்திரமே இதுவாகும்.
அனுராதபுர மாவட்டத்திற்கு மேலதிகமாக பொலனறுவை, கிராதுறுகோட்டை, அம்பாறை, பிரதேசங்களிலும் பெரும் எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளர்கள் இருக்கிறார்கள். பொலனறுவை மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானவர்கள் சறுநீரக நோயாளர்களாவர். சதவீத அடிப்படையில் உயர்நிலை இதுவாகும். இலஙகை வைத்திய சங்கத்திற்கு அமைவாக வடமத்திய மாவட்டத்தில் 150,000 சிறுநீரக நோயாளர்கள் வாழுகின்றனர். அவர்களுள் 20000 நோயாளர்கள் வருந்தோறும் மரணிக்கின்றனர்.
நீண்ட காலமாக இலங்கையில் நிகழ்ந்த யுத்தத்தினை பார்க்க இந்நிலை மிகவும் அபாயகரமானதாகும். வடமத்திய மாகாணத்தின் வைத்தியசாலைகள் சிறுநீரக நோயாளர்களால் நிரம்பி வழிவதனை அங்கு செல்லும் யாராலும் அவதானிக்க முடியும். இந்நோயால் பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபடும் 30 – 50 வயதிற்குட்பட்ட ஆண்மக்களே இரையாகின்றனர். தந்தைமார்கள், கணவன்மார்கள், சகோதரர்கள் போன்ற குடும்பச்சுமையை ஏற்கும் ஆண்மக்கள் இப் பரிதாபநிலைக்குட்படுவதால் அந்த குடும்பங்களின் பொருளாதார நிலை மென்மேலும் மோசமான நிலைக்குள்ளகின்றன. பூஜாகஸ்பங்குவ மகா வித்தியாலத்தின் அதிபரான் எச். எம் காமிணீ ஹிமிதும அவர்கள், தம் பாடசாலையில் மாத்திரம் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்களின் தாய் தந்தை எனுமு; இருவருமே நெடுநாள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக மரணமடைந்துள்ளனர் என குறிப்பட்டார். இது பெரும் சமூச பிரச்சினை என்பதனை இதன்மூலமே எம்மால் உணர்ந்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்நிலை ஏனைய பிரதேசங்களிலும் பரவிச்செலலும் துர்பாக்கிய நிலையும் இப்போது மேலோங்கியுள்ளது.
இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு காரணம் என்ன? சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார அமைப்பு என்பன ஒன்றிணைந்த இந்த நோய்க்கான காரணத்தை ஆய்வு செய்துள்ளனர். அது மாத்திரமின்ற pஉள்நாட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் இது தொடர்பாக பல பரிசோதனைகளை நிகழ்த்தியுள்ளத. இந்த ஆய்வுகளை நடாத்திய ஆய்வாளர்களில் பெரும்பாலானோர்கள், இந்த நோய்க்கு காரணம் பல்வேறு இரசாயனக்கலவைகள் கலந்த அசுத்தமான நீரை குடிநீராக பயன்படுத்துவதே இதற்கு காரணம் என்று நம்புகிறார்கள். இது தொடர்பாக ஆய்வுகள் நடாத்திய களனிப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பிரிவின் ஆய்வாளர்கள், நீரில் அதிகளவாக கலந்துள்ள ஆசனிக், கெட்மியம் பாதரசம் என்பன இந்நோயிக்கு நேரடியாக தாக்கம் என தெரிவித்துள்ளனர். இன்னும் பல பரிசோதனைகளிலும் முடிவு இதுவாகும். வடமத்திய மகாணத்தில் பெரும்பாலும் விவசாயத்தின்போது பயன்படுத்தும் இரசாயன உரம், பூச்சிநாசிகள் என்பன வற்றின் காரணமாக புவியின் மேற்பரப்பு நீரில் மாத்திரமின்றி நிலநீரிலும் இந்த அபாயகரமான இரசாயங்கள் கலந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான வைத்தியர் சன்ன ஜயசுமண, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், சரத் குணதிலக, பிரியன்தா சேனானாயக்கா என்போரால் புரிய பரிசோதனைகளுக்கமைய விவசாயத்தின்போது உபயோகிக்கும் இரசாயனங்களில் காணப்படும் க்லயிட்பொசிட் எனும் இரசாயனம் நீருடன் சேர்ந்து உருவாகும் சேர்க்கையே இந்த சிறுநீரக நோய்கான காணரம என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முழு நாட்டிற்கும் பெரும் பாதிப்பு செலுத்தும் அசுத்தமான குடிநீரினால் தோன்றும் சிறுநீரக நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றும்பொருட்டு ஷ;ரத்தா தொலைக்காட்சி, சமூக அபிவிருத்தி நிலையம், களனி பல்கலைக்கழகத்தின் வேதியியல் பிரிவு மற்முறு; சிவில் பாதுகாப்பு பிரிவினர் ஒன்று சேர்ந்து செயற்படுத்தும் ஷ;ரத்தா பரிசுத்தமான நீர் அனைவருக்கும் எனும் புண்ணியமிகு செயற்றிட்டம் கீழ்வரும் செயற்பாட்டு முறைகளின் மூலம் செயற்படுத்தப்படுகின்றன.
முழு நாட்டிற்கும் பெரும் பாதிப்பு செலுத்தும் அசுத்தமான குடிநீரினால் தோன்றும் சிறுநீரக நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றும்பொருட்டு ஷ;ரத்தா தொலைக்காட்சி, சமூக அபிவிருத்தி நிலையம், களனி பல்கலைக்கழகத்தின் வேதியியல் பிரிவு மற்முறு; சிவில் பாதுகாப்பு பிரிவினர் ஒன்று சேர்ந்து செயற்படுத்தும் ஷ;ரத்தா பரிசுத்தமான நீர் அனைவருக்கும் எனும் புண்ணியமிகு செயற்றிட்டம் கீழ்வரும் செயற்பாட்டு முறைகளின் மூலம் செயற்படுத்தப்படுகின்றன.
சிறுநீரக நோய் பெருமளவில் பரவியுள்ள பிரதேசங்களில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர், பருகுவதற்கு உகந்ததா இல்லையா என பரிசோதனைகள் செய்தல். இதற்காக தேசிய நீர்வள சபையினதும் களனி பல்கலைக்கழகத்தின் உத்துழைப்பு இச் செயற்றிட்டத்திற்கு கிடைப்பதோடு சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு பரிசோதிக்கப்படும் அந்நீர் நிலைகளின் நீர் பயன்பாட்டிற்கு உகந்ததா இல்லையா என பிரதேசவாசிகளால் அறிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறாக இயன்றளவான நீர்நிலைகள் பரிசோதனைக்குட்படுத்தி அந்த தரவுகளை இச் செயற்றிட்டத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
முதலாம் கட்டம் செயற்படுத்தும்போது அதன்மூலம் பெற்றுக்கொள்ளும் தரவுகள் மற்றுமு; ஏனைய நிறுவனங்களால் முன்னரெ சேகரிக்கப்பட்டிருக்கின்ற தரவுகளைமுயு; அடிப்படையாகக் கொண்டு பரிசுத்தமான குடிநீர் அவசியமான பிரதேசங்களை இனங்கண்டு அந்த பிரதேசங்களில் நீர் சுத்திகரிப்பு நிலைகளை ஸ்தாபித்தல். இந்நீர் நிலைகள் வருடந்தோறும் நீர்பெறக்கூடிய நீர் நிலைகளை அடிப்படையாகக்கொண்டு நிறுவப்படுவனாவாகும்.
மேற்கூறப்பட்ட படிமுறைகளை நடைமுறைப்படுத்துவதோடு இந்த அபாயகரமான நோயிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் தொடர்பாக மக்களை தெரியப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடாத்தப்படும். நீர்நிலைகள் மாசுபடும் வகையில் இரசாயன உரங்கள், பூச்சிநாசிகள் என்பன உபயோகிக்காமை, சுத்தமான நீரை குடிநீராக பயன்படுத்துவதன் நன்மைகள் என்பன தொடர்பாக மக்களை அறியப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
To experience life and to win at life. Let your humanity be a guiding light in their time of darkness . This is you time to help.