
“මියැදෙනා හදකට පණනලක් වන්නට ලේ බිඳක් දන් දෙමු”
“මියැදෙනා හදකට පණනලක් වන්නට ලේ බිඳක් දන් දෙමු” “මියැදෙනා හදකට පණනලක් වන්නට ලේ බිඳක් දන්දෙමු“ යන උදාර පුණ්ය චේතනාව යටතේ ශ්රද්ධා රූපවාහිනිය සුපිහිටි කඩුවෙල, මහමෙව්නාව
நாட்டில் குறைவாக குருதிகொடை அளிக்கும் மாதங்களை தேர்வு செய்து இரத்ததானம் செய்வதன் மூலம் இரத்த வங்கிக்கு ஏற்படும் இரத்த குறைபாடுகளை போக்கி அப்பாவி நோயாளர்களை காப்பாற்றும்பொருட்டு துவங்கப்பட்டதே ஷ;ரத்தா இரத்த தான செயற்றிட்டமாகும். இச் செயற்றிட்டம் இன்றளவிலும் மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. நாடு பூராகவும் பரவியிருக்கும் அனைத்து மஹமெவ்னா தியான ஆஸ்ஸிரமங்களை மையப்படுத்தி இச் செயற்றிட்டம் வருடம் பூராகவும் சிறப்புற செயற்படுகின்றது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் மாத்திரம் 6000 பயின்டுக்கள் இரத்தத்தினை தேசிய குருதி வங்கிக்கு அளிக்க எம்மால் இயலுமானதாக இருந்தது.
ஆம்.. உங்கள் மனதில் தோன்றிய இந்த எண்ணம் கூட உங்களுக்கு நிறைய புண்ணியங்களை ஈட்டித்தருவதாகும். ஆனால் நீங்கள் சிற்சில தகுதிகளை பூரணப்படுத்தியவராக இருக்க வேண்டும்.
18 – 55 வயதிற்கிடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
50மப விட அதிக உடல் எடையை கொண்டிருக்க வேண்டும்.
சுகாதாரமான ஒருவராக வேண்டும்.
இறுதியாக இரத்த தானம் செய்து குறைந்தது நான்கு மாதங்களாவது ஆகியிருக்க வேண்டும்.
மேற்கூறிய விடயங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் நீங்களும் இரத்த தானம் செய்யலாம். ஆனால் இரத்த தானம் செய்ய நீங்கள் மேலும் தகுதியானவரா என அறிந்துகொள்வதற்கு அந்த முகாமின்போது மேலும் பல தனிப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். அதன் பின்னர் நம்பிக்கைக்குரிய ஒரு வைத்தியரிடம் சிறிது நேரம் தனிப்பட்ட முறையில் பேச வேண்டியதாக இருக்கும். அங்கு உங்களுடைய சுகாதார நிலை தொடர்பாக உறுதிபாட்டிற்கு வந்த பின்னர் உங்கள் உடலில் பயனிக்கும் உயிரான உதிரத்தை இன்னுமொருவரின் உயிரை காப்பாற்றுவதற்காக தானமளிக்கும் உத்தம மனிராக உங்களாலும் முடியும்.
கண்டிப்பாக இல்லை. அதன் காரமாகவே அங்கு பூரணப்படுத்த கொடுக்கும் பத்திரத்தினை தனிமையாக பூரணப்படுத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகின்றன. அதேபோன்று வைத்திய தர்மங்களை செவ்வனே கடைபிடிக்கும் வைத்தியர் உங்கள் தனிப்பட்ட விடயங்களை காப்பாற்றும் பொறுப்புடையவராவார். எனவே அது தொடர்பான எத்தகைய விடயங்களை வேண்டுமானாலும் நீங்கள் எவ்வித தயக்கமுமின்றி வைத்தியரிடம் நேரடியாக பேச முடியும்.
அது மனிதத்தன்மையற்ற செயலாகும். உய்த்துணர்வுடன் புத்த பகவானை சரணடைந்த ருவருக்கு ஒருபோதும் அது தகுந்த செயலன்று. அவ்வாறு பொய் தகவல்களை அளிப்பதால் உங்கள் சீலமும் பழுதாகின்றது. அந்த இரத்தத்தினை பெறுமு; நோயாளியின் உயிருக்கும் அது ஆபத்தானதாகும். எனவே எக் காரணத்தை முன்னிட்டும் உங்களுக்கு வழங்கப்படும் விபரக்கோவையில் பொய்யான தகவல்களை அளிக்க வேண்டாம். இரத்தத்தின் மூலம் பல நோய்கள் உள்ளன. எயிட்ஸ் போன்ற கொடிய நோய்கள் மாத்திரமின்றி மஞ்சட்காமாலை, மலேரியா மற்றும் ஏனைய பாலியல் நோய்களும் இரத்தத்தினால் பரவக்கூடியவையாகும். இரத்தத்தினை தானமளிப்பவருக்கு இத்தகைய நோய்கள் இருப்பின் அந்த குருதியை பெறுபவருக்கும் கண்டிப்பாக இந்த நோய்கள் பரவும்.
அந்த விபரக்கோவையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உண்மையாக நேர்மையாக பதிலளிக்க வேண்டியதன் அவசியத்தை உணரக்கூடியதாக இருக்கும். இவ் அனைத்து செயற்பாடுகளினதும் ஒரே எதிர்பார்ப்பு அப்பாவி உயிர்களை காப்பாற்றுவதாகும். எனவே ஒருபோதும் பிழையான தவறான பொய் தகவல்களை அளிக்க வேண்டாம். இரத்ததான முகாம்களின் மூலம் பெறப்படும் இரத்தத்தினை நோயாளிகளுக்கு அளிக்க முன்னர் இரசாயனபரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமானதாகும். தனக்கு மேற்கூறப்பட்ட நோய்கள் ஏதேனுமு; இருக்கின்றதா என அறிந்துகொள்வதற்கும் பலபேர் இரத்த தானம் அளிக்க முன்வருகின்றனர். அது முறையற்ற செயலாகும். இத்தகைய செயற்பாடுகளின் மூலம் உங்கள் இரத்தத்தினை பெறவிருக்கும் அப்பாவி நோயாளியின் உயிரே ஆபத்திற்குள்ளாகின்றது.
இத்தகைய பரிசோதனைகளில் குறிப்பிட்ட நோய் இரத்த தானம் அளித்தவருக்கு தொற்றியிருக்கிறதா என உறுதிபடுத்துவதற்கென்றால் அந்த நோய்க்கு எதிராக இரத்தத்தினுள் உற்பத்தி செய்யப்படும் வெண்குருதி அணுக்கள் ஒரு அளவினை விட அதிகமாக இருக்க வேண்டும். உதாரணமாக நாம் எயிட்ஸ் நோயை எடுத்துக்கொள்வோம். ஒருவருக்கு எயிட்ஸ் உண்டாகிய முதல் மூன்று நான்கு மாதங்களுக்குள் உறுதியாக இனங்கண்டுகொள்வது கடினமாகும். வைரஸ் தொற்றி சிறிது காலமேயானதால் குருதி பரிசோதனையின் மூலம் மாத்திரமே அறிந்துகொள்ள முடியாது. அத்தகையவர் இரத்தம் அளித்தாலும் இரசாயனப் பரிசோதனைகளின் பின்னர் அது சுகாதாரமான ஒருவருடைய குருதி என்றே கருத்திற்கொள்ளப்படும். அந்த இரத்தத்தினை பெறும் அந்த அப்பாவி நோயாளிக்கும் அந்த கொடிய நோய் தொற்றிக்கொள்ளும். இத்தகைய அபாயகரமான நிலைகள் தோன்றா வண்ணம் இருப்பதற்காகவே அந்த விபரக்கோவையில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக கேள்விகள் கேட்கப்படுகின்றன.
எனவே உண்மையான தகவல்களையே அளியுங்கள். மும்மணிகளை ரணடைந்து சீலமிகுந்தவராக ஒரு உயிரை காப்பற்றும் ஒருவராகுங்கள்.
இலங்கையில் சிற்சில மாதங்களில் மிகவும் குறைந்தளவே இரத்த தானமளிக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஏப்பிரல், ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் இரத்த குறைபாடுகளுடைய hதங்களில் நோயாளிகளின் உயிர் ஆபத்திற்குரிய நிலைக்குள்ளாக்கப்படுகின்றன. இந்த நிலையை தவிர்ப்பதற்காகவே மஹமெவ்னா தியான ஆஸ்ஸிரமத்தினோடு ஒன்றிணைந்து ஷ;ரத்தா தொலைக்காட்சி இந்த புண்ணியமிகு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் ஷ;ரத்தா இரத்த தான முகாம்களில் பங்குபற்றி இரத்தத்தை தானமளிப்பதுடன் நின்றுவிடாமல் உங்கள் நிறுவனங்களின் இளைஞர் சங்க உறுப்பினர்கள் உன்றிணைந்து இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்ய முடியும். அதற்கு அவசியமான ஊடக அனுசரணையை ஷ;ரத்தா தொலைக்காட்சி உவந்தளிக்கும் என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகிறோம். ஷ;ரத்தா இரத்த தான முகாமொன்றை உங்கள் பிரதேசத்திலும் நடாத்த விரும்பினால் 0112 571 471, 0112 548 400 எனும் எண்களை தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக தகவல்களை பெற முடியும்.
அனைவரிடமும் ஒரே வகையிலான இரத்தம் இருப்பதில்லை. மிகவும் அரிய வகையிலான இரத்த வகைகளும் இருக்கின்றன. அத்தகைய இரத்தமிருக்கும் நோயாகிளுக்கு இரத்தம் அவசியமாகின்ற போது அத்தகைய இரத்த வகையை தேடிக்கொள்வது கடினமாகின்றது. அத்தகைய அசளகரியங்களை தவிர்க்கும்பொருட்டு தேசிய இரத்த தான சேவையின் மூலம் அரிய இரத்த கொடையாளிகள் என்று ஒரு சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
உங்கள் இரத்தம் ஓ – நெகடிவ், பி – நெகடிவ், ஏ – நெகடிவ், ஏபி – நெகடிவ், ஏபி – பொசிட்டிவ் என்றால் நீங்களும் அரிய வகை இரத்தத்திற்கு சொந்தகாரராவீர்கள். இரத்தானம் வழங்கும் நீங்கள் இந்த சங்கத்தில் உறுப்பினராகலாம். எவருக்கேனும் மேற்கூறப்பட்ட வகையிலான இரத்தம் தேவைப்பட்டால் தேசிய இரத்த தான சேவை உங்களை தொடர்புகொண்டு அதனை அறியத்தருவார்கள். அப்போது உங்களால் அந்த நோயாளியின் உயிரை காப்பாற்றலாம். இவ்வாறாக உயிருக்கு போராடும் ஒருவருக்காக உங்கள் இரத்தத்தினை தானமளிக்க முடியுமானால் அது மிகப்பெரும் புண்ணியமாகும்.
இந்த சங்கத்தில் அங்கத்தவராக நீங்களும் விரும்பினால் 0115 33 21 54 தொடர்புகொள்ளுங்கள்.
“මියැදෙනා හදකට පණනලක් වන්නට ලේ බිඳක් දන් දෙමු” “මියැදෙනා හදකට පණනලක් වන්නට ලේ බිඳක් දන්දෙමු“ යන උදාර පුණ්ය චේතනාව යටතේ ශ්රද්ධා රූපවාහිනිය සුපිහිටි කඩුවෙල, මහමෙව්නාව
කඩුවෙල මහමෙව්නාව බෝධිඥාන අසපුවේ පැවැත්වූ ලේ දන්දීමේ පින්කම. “මියැදෙනා හදකට පණනලක් වන්නට ලේ බිඳක් දන්දෙමු“ යන උදාර පුණ්ය චේතනාව යටතේ ශ්රද්ධා රූපවාහිනිය සුපිහිටි කඩුවෙල, මහමෙව්නාව
“මියැදෙනා හදකට පණනලක් වන්නට ලේ බිඳක් දන් දෙමු” මියැදෙනා හදකට පණනලක් වන්නට ලේ බිඳක් දන්දෙමු“ යන උදාර පුණ්ය චේතනාව යටතේ ශ්රද්ධා රූපවාහිනිය සුපිහිටි කඩුවෙල, මහමෙව්නාව
To experience life and to win at life. Let your humanity be a guiding light in their time of darkness . This is you time to help.