Kaduwela, Sri lanka.

Individual Projects
0 +
People Benefited
0 +
Amount Raised in LKR
0 M +
SCO - Shraddha Charity

ஷ்ரத்தா சமூக நல பிரிவு

புகலிடம் அவசியமாகும் அவர்களுக்காக உங்கள் மனிதநேயத்திற்கு இடமளியுங்கள்.

நிலைமாறிப்போவது உலக உயிர்களுக்கு நிலையாக கிடைப்பதாகும். அது எவ்வாறு? எப்போது, எந்நேரத்தில் நிகழும் என்பதனை யாராலும் கூற முடியாது. ஆனால் புகலிமற்று பரிதவித்து இருக்கும் நிலை மிகவும் கொடியதாகும். மனிதனாகட்டும் அல்லது மிருகமாகட்டும் அந்த பரிதவிப்பு நிலைகளை சமாளித்துக் கொண்டு வாழ்க்கைக்கு முகங்கொடுப்பதானது பெரும் சவாலுக்குரிய விடயமாகும். அத்தகையவர்கள் முகங்கொடுக்கும் சவாலுக்கு உறுதுணையாக அமையும் வண்ணம் உங்கள் மனிதநேயத்திற்கு இடமளிக்கும் புண்ணிய ஊற்றே, SCO.lk

அனைத்துலக உயிர்களின் மீதும் கொண்ட மகா கருணையை முதற்கொண்ட உலகிற்கு தோன்றிய எமது கௌதம சம்மா சம்புத்த பகவானின் நிகரிலா கருணை மற்றும் அன்பினை புகலிடமாகக் கொண்ட நாம் அவர்களுக்காக எமது பணியை மேற்கொள்வோம்.

எமது பிரதான செயற்றிட்டங்கள்.

எமது செயற்றிட்டங்கள் பிரதானமாக ஆறுவகையினுள் செயற்படுத்தப்படுவதுடன் அவற்றின் நோக்கங்கள் என்பனவற்றை கீழ்வரும் இணைப்புக்களின் மூலம் அறிந்துக் கொள்ள முடியும்.

பரிசுத்தமான தண்ணீர் அனைவருக்கும்.

இரசாயனக்கலவைகள் கலந்த நீரைப் பருகுவதால் ஏற்படும் சிறுநீரக நோய்களை குறைக்கின்ற நோக்கத்தில் துவங்கிய தூய்மையான குடிநீரை வழங்கும் புண்ணிய செயற்றிட்டம்.

கல்வி புலமைப்பரிசில்


கல்வி கற்பதற்கு திறமையான ஆனால் பொருளாதார இன்னல்களினால் கவலையுறும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் புலமைப்பரிசில் செயற்றிட்டம்

இரத்த தானம்

தேசிய இரத்த வங்கிக்கு குறைவான அளவில் இரத்தம் கிடைக்கும் மாதத்தினை நோக்காகக் கொண்டு நடாத்தப்படும் இரத்த தான பாசறைகள்

அபயதானம்

அப்பாவி மிருகங்களை மரணத்திலிருந்து விடுவித்து உயிரை தானம் செய்யும் அபயதான புண்ணிய நிகழ்வு

சுகாதார தானம்

நோய் நொடிகளினால் துன்புறும் எமது சகோதர மக்களுக்கு உபகாரமாக செயற்படுத்தப்படும் புண்ணிய செயற்றிட்டம்.

அசரண சரண செயற்றிட்டம்

உதவி தேவைப்படுவோர்களுக்கு உபகாரமாகும் வகையில் துவங்கப்பட்ட புண்ணிய செயற்றிட்டம்.

புத்தர் சிலைகளின் பிரசாதம்

இந்த தொண்டு திட்டத்தின் மூலம், வழிபட வேண்டிய சம்புத்தர் சிலைகள் தொலைதூர பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கோவில்களுக்கு வழங்கப்படுகின்றன.

கல்வி உபகரணங்கள் நன்கொடைகள்

இந்த அறக்கட்டளை திட்டத்தின் நோக்கம், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கற்றல் திறன் கொண்ட குழந்தைகளுக்கும், தொலைதூரப் பகுதிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் இலவச கல்வி உபகரணங்களை வழங்குவதாகும்.

சிறுநீரக நோயாளிகளுக்கு உதவுதல்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலைக்கு இரத்தம் ஏற்றுவதற்காக நோயாளிகளை அழைத்து வருவதற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.

உங்கள் மனிதாபிமானத்திற்கு இடமளியுங்கள்.

அவர்கள் தம் வாழ்வினைக் காண்பதற்கும் வெல்வதற்கும் உங்கள் மனிதாபிமானத்தினை அவர்களுக்கு அளியுங்கள். இதுவே அதற்கான காலமாகும்.