எமது செயற்றிட்டங்கள் பிரதானமாக ஆறுவகையினுள் செயற்படுத்தப்படுவதுடன் அவற்றின் நோக்கங்கள் என்பனவற்றை கீழ்வரும் இணைப்புக்களின் மூலம் அறிந்துக் கொள்ள முடியும்.
நிலைமாறிப்போவது உலக உயிர்களுக்கு நிலையாக கிடைப்பதாகும். அது எவ்வாறு? எப்போது, எந்நேரத்தில் நிகழும் என்பதனை யாராலும் கூற முடியாது. ஆனால் புகலிமற்று பரிதவித்து இருக்கும் நிலை மிகவும் கொடியதாகும். மனிதனாகட்டும் அல்லது மிருகமாகட்டும் அந்த பரிதவிப்பு நிலைகளை சமாளித்துக் கொண்டு வாழ்க்கைக்கு முகங்கொடுப்பதானது பெரும் சவாலுக்குரிய விடயமாகும். அத்தகையவர்கள் முகங்கொடுக்கும் சவாலுக்கு உறுதுணையாக அமையும் வண்ணம் உங்கள் மனிதநேயத்திற்கு இடமளிக்கும் புண்ணிய ஊற்றே, SCO.lk